அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்ட துறைகளில் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்து வர மறுபக்கம் பெண்களின் பொதுவெளிப் பாதுகாப்பு கவலை அளிக்கும் விதத்தில் இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு ரூ. 1,000 , சுய உதவிக் குழுவில் உள்ள மகளிர்களுக்கு வட்டி இல்லா வாகனக் கடன் ரூ. 1 லட்சம் வரை,பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் கொள்முதல் மற்றும் விற்பனை சந்தை,பெண் விவசாயிகளுக்கு டிராக்டர், விவசாய இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சி, மண் ஆரோக்கியம் குறித்த பயிற்சி,, விதை திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சிறுகுறு தொழில்களில் பெண்களை ஊக்குவிப்பு,
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை என கூறி பெண்களை டார்கெட் செய்து வாக்குறுதிகளை அளித்த திமுக 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் வரிசை எண் 476ன்படி பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட குறித்த விவரங்கள் முழுமையாக ரகசியத்துடன் பாதுகாக்கப்படும். பெறப்படும் புகார்கள் மீது உரிய மேற்கொள்ள தனி பிரிவுகள் அமைக்கப்படும் என்று பெண்களை டார்கெட் செய்து ஆட்சியில் அமர்ந்த திமுக அரசு.
இன்றைக்கு பெண்களின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன் என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் குறிப்பிட்டார்
பெண் மக்களை இழிவுபடுத்துவதும் அடிமைப்படுத்துவதும் அநியாயமானது மற்றும் பொல்லாதது . என்று அன்றைக்கே தந்தை பெரியார் அவர்கள் கூறினார்கள்
ஒரு பெண் கழுத்து நிறைய நகைகளுடன் நள்ளிரவில் வீதி வழியே சென்றுபாதுகாப்பாக வீடு திரும்பும் போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றார் மகாத்மா காந்தி.
பெண்கள் என்பதைவிட பெண் குழந்தைகளும் இன்று பாலியல் துன்புறுத்தலுக்கும், வன்கொடுமைக்கும் உள்ளாகிறார்கள். இப்படியான நிலையில் அம்பேத்கர், பெரியார், மகாத்மா காந்தி விரும்பிய சுதந்திரம் கிடைத்திருக்கிறதா? நான் சுதந்திர மண்ணில் வாழ்கிறோமா? அம்பேத்கர் அவர்கள் கண்ட பெண்கள் பாதுகாப்பு எங்கே? இந்த திராவிட மாடல் ஆட்சியில் பெண்களின் நிலை எங்கே சென்று கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் அவர்கள் பெண்களை இழிவுபடுத்தியதையும் அடிமைப்படுத்தியதையும் கண்டித்த கண்டனத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருக்கிறார்கள் இந்த பெரியாரின் பேரன்கள். காந்தி அவர்கள் விரும்பிய பெண் சுதந்திரம் எங்கே சென்றது என்று நான் மிகவும் வருத்தப்படுகிறேன் கண் கலங்குகின்றேன் இந்நிலை மாற வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்.
இவன்;-
கா.வீரபாகு நாயுடு
மாவட்ட அமைப்பு தலைவர்
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்

Comments
Post a Comment