பெண்கள் அனுமதிக்கப்படாத முருகன் கோவில்! திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பிரதான சாலைப் பகுதியில் அமைந்துள்ளது தொன்மை வாய்ந்த பல அதிசயங்களை உள்ளடக்கிய ஸ்ரீவீரக்குமார் திருக்கோவில். 600 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக முருகனின் அவதாரமாக உருவெடுத்த ஸ்ரீவீரக்குமார் சுவாமிகள் முட்புதர்களுக்கிடையே காட்சியளித்ததையடுத்து அப்பகுதி மக்கள் அவற்றை அகற்றி சீர்ப்படுத்தி வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் 16ம் நூற்றாண்டில் முழுமையாக சீரமைக்கப்பட்டு கோயிலாக வடிவமைக்கப்பட்டு 1974ம் ஆண்டு கும்பாபிசேகம் நடத்தப்பட்டு, அதிகாலை முதல் அனைத்து வகை பூஜைகளும் முறையாக நடந்தேறி வருகிறது. இந்தக் கோயிலில் வழிபாடு தொடங்கிய காலம் முதலே வீரக்குமார் சன்னதிக்குள் ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பெண் பக்தர்கள் சன்னதியின் முன் மண்டபத்துக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்தே மூலவரை தரிசித்து பிரசாதங்களை பெற்று வருவது நடைமுறையில் உள்ளது. அதாவது, வீரக்குமார் ஆதி சக்தியின் அருளைப் பெறுவதற்காக தவமிருந்த போது பெண்ணொருவரின் ஆவியொன்று தவத்தைக் கலைத்ததாகவும், ஆதி சக்தியின் அருளைப் பெறமுடியாமல் தடையை ஏற்படுத்தியதா...