Skip to main content

Posts

Showing posts from 2020

ஆசிரியர் தினம்

ரத சப்தமி

ரத சப்தமி திருநாள் சூரிய தேவன் உலகிற்கு எல்லாம் ஒளி கொடுக்கும் கடவுள். சூரிய வழிபாடு காலம் காலமாக கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளில் தமிழர் திருநாளாக சூரியனை வழிபடுகின்றனர். தை மாதம் வளர்பிறையில் ஏழாம் நாள் சப்தமி திதி ரத சப்தமியாக கொண்டாடுகிறோம். இதனை சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடுகின்றனர். தை மாத வளர்பிறை சப்தமி அன்றுதான் ரத சப்தமி கொண்டாடப்படுகிறது.  இந்த ஆண்டு இன்று பிப்ரவரி 1 ஆம் தேதி ரத சப்தமி கொண்டாடப்பட்டது. இந்த நாளில் விரதம் இருந்து சூரியனை வழிபட்டால் நீண்ட ஆயுளும் குறைவற்ற செல்வமும் பரிபூரணமாக கிடைக்கும். ரத சப்தமி அன்று அதிகாலையில் எழுந்து ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து காலை 6 மணி முதல்  7.30 மணிக்குள் நீராடவேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும். ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகு...