Skip to main content

ரத சப்தமி

ரத சப்தமி திருநாள்

சூரிய தேவன் உலகிற்கு எல்லாம் ஒளி கொடுக்கும் கடவுள்.

சூரிய வழிபாடு காலம் காலமாக கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளில் தமிழர் திருநாளாக சூரியனை வழிபடுகின்றனர். தை மாதம் வளர்பிறையில் ஏழாம் நாள் சப்தமி திதி ரத சப்தமியாக கொண்டாடுகிறோம். இதனை சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடுகின்றனர்.

தை மாத வளர்பிறை சப்தமி அன்றுதான் ரத சப்தமி கொண்டாடப்படுகிறது.  இந்த ஆண்டு இன்று பிப்ரவரி 1 ஆம் தேதி ரத சப்தமி கொண்டாடப்பட்டது. இந்த நாளில் விரதம் இருந்து சூரியனை வழிபட்டால் நீண்ட ஆயுளும் குறைவற்ற செல்வமும் பரிபூரணமாக கிடைக்கும்.

ரத சப்தமி அன்று அதிகாலையில் எழுந்து ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து காலை 6 மணி முதல்  7.30 மணிக்குள் நீராடவேண்டும்.

தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.

ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள்.

இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.

முதலில் ரதசப்தமி என்றால் என்ன என்ன?







பூமி சற்றே ( 23.5 *) சாய்ந்த நிலையில் தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. நாம் ரயிலில் பயணிக்கும்போது, நாம் நிலையாக இருப்பது போலவும் வெளியே மரம் மலை முதலானவை ஓடுவது போல மாயத்தோற்றம் ஏற்படுவது போல பூமி சுழன்றாலும் சூரியன் நகர்வது போன்ற மாயத்தோற்றம் உண்டாகிறது. இப்படியான சூரியனின் பயணம் ஆறுமாதம் வடக்கு நோக்கியும் அடுத்த ஆறுமாதம் தெற்கு நோக்கியும் இருப்பதாக உணர்கிறோம்.

வடக்கு நோக்கிய பயணம் உத்தராயணம் ஆகும். அதாவது தெற்கே மகர ரேகையிலிருந்த சூரியன் வடக்கேயுள்ள கடக ரேகை நோக்கி பயணிக்கும் காலம் உத்தராயணம் ஆகும். மேல்நாட்டினர் கணக்குப்படி மகர ரேகையில் இத்திருப்பம் நடைபெறுகிறது !! இந்துக்கள் ஐதீகப்படி தைமாதம் முதல் நாளன்றே உத்தராயணம் துவங்கி விட்டாலும்  உண்மையிலேயே சூரியனின் ரதம் தைமாத வளர்பிறை சப்தமி திதியன்று தான் திரும்புகிறது. இதனால்தான் இந்த சப்தமி திதிக்கு தனிச்சிறப்பு.

ரத சப்தமி தினத்தன்று சென்னைக்கு அருகிலுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலை ஸ்ரீ ரெங்கநாதர்  திருக்கோவில் திவ்யதேசத்தில் ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் கலந்துகொண்டு சிறப்பாக எம்பெருமானை சேவித்தனர்

*ஓம் சூர்ய தேவாய நமக...*

Comments