Skip to main content

ஹஸ்தரேகா சாஸ்திரம்

கைகளுக்கென்று தனி இடம் உண்டு.
நாம் அன்றாட பணிகளைச் செய்வதற்கு மிகவும் பயன்படுகிறது. கைகளின் உதவி இல்லாமல் நாம் எந்தவொரு செயலையும் செய்ய முடியாது.

கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும்.

ஹஸ்தரேகா சாஸ்திரம்
கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற காலையில் எழுந்ததும் கைகளைப் பார்த்து கீழே இருக்கும் ஸ்லோகத்தை கூற வேண்டும்.

‘கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்’

நாம் உள்ளங்கைகளைப் பார்க்கும் பொழுது இறைவனின் உருவங்கள், அபயவரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தருவதாக தோன்றும். இதனால் இறைவனின் உருவத்தின் பெருமைகளை கைகள் வெளிப்படுத்துகின்றன. எனவே கைகள் கடவுளுக்குச் சமமானது என வேதங்கள் சொல்கின்றது.

அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெறுவதற்கு தான் நாம் காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும் என்று புராணங்களில் கூறப்பட்டதை நாம் பழக்கவழக்கமாக கொள்கிறோம்.

Comments